திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 2 சிறுமிகளுக்கு சுனைபுகநல்லூரை சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் (55) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை, அந்த சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். உடனே அந்த சிறுமிகளின் பெற்றோர்கள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகார் அளித்தனர். மாவட்ட குழந்தைகள் நல மேற்பார்வையாளர் கலாவதி இது குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய மகளிர் போலீசார், திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன் மீது 10,11(1), 12, 9(m) – SEXUALABUSE ACT351(3) சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed.