திருச்சி உறையூர் நாடார் தெருவை சேர்ந்தவர் ரபீக்ராஜா (வயது 42). இவர், உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது நண்பரை பார்ப்பதற்காக அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது நண்பரின் மனைவிக்கும், இவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரது நண்பர் உயிர் இழந்தார். அதன்பின்னர், நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று விதவை பெண்ணுக்கு ரபீக்ராஜா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. தனது திருமண வயது மகளின் எதிர்காலத்தை நினைத்து ரபீக் ராஜாவுடன் இருந்த தொடர்பை அந்தப் பெண் துண்டித்தார். இதனை , ரபீக்ராஜா ஏற்றுக்கொள்ளாமல் அவரது வீட்டுக்கு சென்று விதவைப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து அந்தப் பெண், கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து ரபீக் ராஜாவை கைது செய்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.