செப்டம்பர் -15 – பேறறிஞர் அண்ணாவின் 116 -வது பிறந்தநாள் ! திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ. சீனிவாசன் அறிக்கை
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதையொட்டி திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 116 -வது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணியளவில் திருச்சி மாநகர் மாவட்டஅதிமு கழகம் சார்பில் திருச்சி மேலசிந்தாமணி அருகில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதுசமயம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பகுதி செயலாளர் மற்றும் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.