திருச்சி மாநகரில் சமீப காலமாக கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் மற்றும் கஞ்சா புழக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதைத்தடுக்க போலீசார் அவ்வப்போது முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்தது போலீசார் ராம்ஜீ நகர்ர மில்க் காலனி பகுதிகளில் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கழிவறை அருகே கஞ்சா விற்றதாக ராம்ஜி நகர் மில் காலனி பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணியான பேபி என்பவரை கைது செய்தனர்.இதே போல் ரெட்டைமலை ஒன்டி கருப்பசாமி கோயில் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக இரண்டு பெண்களை மாநகர மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
Comments are closed.