Rock Fort Times
Online News

வண்டலூர் அருகே பள்ளிக்குள் புகுந்து மாணவிக்கு பாலியல் தொல்லை… *சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே? உதயநிதி கேள்வி…!

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த கண்டிகையில் உள்ள அரசுப் பள்ளியில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து 10ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவர் வழியாக ஏறி குதித்த ஒரு கும்பல், மாணவிக்கு கைக்குட்டை மூலமாக மயக்க மருந்து கொடுத்து கழிவறையில் வைத்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரி பள்ளியில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் இன்று( செப்டம்பர் 25) வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள பள்ளியின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலின் கண்டனம்,

இந்த சம்பவம் குறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் , வண்டலூர் அருகே பட்டப்பகலில் அரசுப்பள்ளி வளாகத்திலேயே பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வெட்கக்கேடு. மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக முதலமைச்சர் வருகிறார் என்று சொல்லி, இந்த சம்பவத்தை காவல்துறையும், அதிகாரிகளும் மூடி மறைக்க முயற்சி செய்வதும், பாம்புக்கடி என்று மடைமாற்றுவதும், தமிழ்நாடு எவ்வளவு மோசமானவர்கள் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சிங்கப்பெண் அதிரடிப்படை எங்கே? பெண்கள் பாதுகாப்பில் அண்ணனா இருப்பேன் – அரணா இருப்பேன் என்று வாய்கிழிய வசனம் பேசிய முதலமைச்சர் எங்கே? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்