Rock Fort Times
Online News

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி ஜங்ஷன் பகுதியில் சுகாதார சீர்கேடு- மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 46-வது வார்டு, ஜங்ஷன் பகுதி ராக்கின்ஸ் ரோடு பகுதியில் பிரபலமான ஹோட்டல்கள், செல்போன் கடைகள், ஜவுளிக்கடைகள், ஸ்வீட் ஸ்டால்கள், பழக்கடைகள், டீக்கடைகள், பூக்கடைகள் மற்றும் பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளுக்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்கின்றனர். இந்த கடைகளின் இடதுபுறம் பாதாள சாக்கடை அடைத்துக் கொண்டு இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக சாக்கடை நீர் செல்ல வழியின்றி அடைத்துக் கொண்டு நிற்கின்றன. அதில், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், குளிர்பான காலி பாட்டில்கள், கேரி பைகள், குப்பைகள் உள்ளிட்டவை அடைத்து கொண்டு இருப்பதால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஒருநாள் வந்து சுத்தப்படுத்தினார்கள். ஆனால், கடந்த இரண்டு மாதங்களாக எந்த சுகாதார பணியும் மேற்கொள்ளப்படாததால் ஜங்ஷன் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக இங்குள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் ரயில் நிலையத்துக்கு செல்லும் பயணிகள் மூக்கை பிடித்துக் கொண்டுதான் செல்ல நேரிடுகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு ஏற்படும். ஆகவே, திருச்சி ஜங்ஷன் பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டினை சரி செய்ய மாநகராட்சி ஆணையர் சரவணன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்