திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாதும் , தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கோவிலின் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் எண்ணினர். கோவில் உண்டியலில் கடந்த 12 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் ரூ. 72,75,692 ரொக்கமும்,1 கிலோ 788 கிராம் தங்கமும், 2 கிலோ 481 கிராம் வெள்ளியும், 188 அயல்நாட்டு நோட்டுகளும்,962 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன என கோவிலின் இணை ஆணையர் கல்யாணி தொிவித்தாா்.
Next Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.