திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்தப்படும் காணிக்கைகள் அவ்வப்போது திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அந்தவகையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் இணை ஆணையா் சி.கல்யாணி தலைமையில் அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோா் இப்பணியில் ஈடுபட்டனா். முடிவில், ரூ.45 லட்சத்து 3 ஆயிரத்து 27 ரூபாய் ரொக்கமும், 1 கிலோ 17 கிராம் தங்கம், 1 கிலோ 390 கிராம் வெள்ளி, 42 வெளிநாட்டு ரூபாய்கள், 334 வெளிநாட்டு நாணயங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.