Rock Fort Times
Online News

செல்போன் சார்ஜரில் மறைத்து கடத்த முயன்ற ரூ.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்…- 2 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை…! (வீடியோ இணைப்பு)

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், சென்னை, மும்பை, திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில் இன்று (08-04-2025) திருச்சியில் இருந்து ஏர் ஏசியா விமானம் கோலாலம்பூர் செல்ல தயாராக இருந்தது. அதில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது 2 பயணிகள் தங்களது செல்போன் சார்ஜரின் உள்ளே மறைத்து வைத்திருந்த ரூ.4.96 லட்சம் மதிப்பிலான இந்தியா மற்றும் வெளிநாட்டு பணத்தாள்களை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்