Rock Fort Times
Online News

உழவர் நலத்திட்டங்களுக்கு ரூ. 47,248 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்…* வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் !

தமிழ்நாடு சட்டப் பேரவையில் பிப்ரவரி–மார்ச் மாதத்தில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். சட்டப் பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருப்பதால் இன்று( பிப்.17) இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை மாநில நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றினார். 2.22 நிமிடங்கள் அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் உரையை வாசித்தார். தொடர்ந்து உழவர் நலன் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இடைக்கால வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:- 30,000 விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி மற்றும் தேனி வளர்ப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. நெல் சேமிக்கும் திறன் 4 லட்சம் மெட்ரிக் டன்னாக மேம்படுத்தப்பட்டுள்ளது. 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைக்கப்படும். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கால்வாய்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் மீன் உற்பத்தி அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை, ஊக்கத்தொகை வழங்க ரூ. 730 கோடி ஒதுக்கீடு. ரூ. 101 கோடியில் அரசு மீன் பண்ணைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. உழவர் நலத்திட்டங்களுக்கு ரூ. 47,248 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் சில திட்டங்களை அவர் வாசித்து வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்