Rock Fort Times
Online News

திருச்சி தொழிலதிபரிடம் ரூ.25 லட்சம் மோசடி…

2 பேர் மீது வழக்கு பதிவு..

திருச்சியை அடுத்த முத்தரசநல்லூர் ரெங்கா நகரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வருபவர் சாதிக் அகமது (வயது 57). தொழிலதிபரான இவர் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் இவரது நண்பர் இஸ்மாயில் என்பவரை அணுகி தொழில் தொடங்க ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அவர் திருச்சி -மதுரை ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே ஒரு இடத்தை காட்டி இந்த இடத்தில் கடை கட்டி தருவதாகவும் அதில் தொழில் தொடங்கலாம் என்று கூறியுள்ளார். இதனை நம்பிய சாதிக்அகமது, அவரது நண்பா் இஸ்மாயில மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ந்தேதி ரூ.5 லட்சமும், 14-ஆம் தேதி ரூ.10 லட்சமும், மீண்டும் 24-ஆம் தேதி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.25 லட்சத்தை நிஜாமுதீன் மற்றும் முருகானந்தத்திடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வெகு நாட்கள் ஆனநிலையில் கடையும் கட்டி தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து கேட்டபோது நிஜாமுதீன் மற்றும் முருகானந்தம் ஆகியோர் பணத்தை திருப்பி தராமல் இருவரும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் சாதிக் அகமது புகார் கொடுத்தார். புகாரின் பேரில் மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் உத்தரவின் பேரில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார், முருகானந்தம், நிஜாமுதீன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்