ரூ.100 கோடி லஞ்சப் புகார்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் மனுவை விசாரிக்க உயர் நீதிமன்றம் ஒப்புதல்…!
முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், டிடிசிபி, சிஎம்டிஏ அனுமதிகள் மற்றும் பிற சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத்தருவதாக கூறி, ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமார், சுரேஷ், ராஜா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பிடி அரசகுமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸின் வீடு, அலுவலகங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் உட்பட 9 இடங்களில் சோதனை நடத்தப்பட்டன. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள், டிஜிட்டல் சான்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அதன்பின்னர், அன்பில் மகேசிடம் செப். 18-ம் தேதி நேரிலும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிராக 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், அன்பில் மகேஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், வழக்கின் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்ய விலக்களிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு இன்று(28-09-2026) விசாரணைக்கு வந்தபோது, அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன், வழக்கின் முதல் தகவல் அறிக்கை நகல் இல்லாமல், மனுவை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு எண்ணிடும் நடைமுறைகளை முடித்து, வழக்கை
ருகிற 30 ம் தேதி (புதன்கிழமை) விசாரணைக்குப் பட்டியலிடுமாறு பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

Comments are closed.