துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இன்று திருச்சி வந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினா். அப்போது பயணி ஒருவர் தான் கொண்டு வந்த அட்டை பெட்டியின் அடுக்குகளுக்கு இடையே, பொடி வடிவிலும் பார் வடிவிலும் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவாிடமிருந்து 176 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூபாய் 10.48 லட்சம் ஆகும்.

Prev Post
Comments are closed, but trackbacks and pingbacks are open.