Rock Fort Times
Online News

விழுப்புரத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது- திருச்சியை சேர்ந்த 4 பேரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை…!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கட்டுக்கட்டாக பணத்துடன் சிலர் நிற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த முகமது ரியாஸ், சிராஜிதீன், அபுபக்கர், சித்திக் ராஜ் முகமது ஆகிய 4 பேரை பிடித்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அந்த பைகளில் கட்டு கட்டாக பணம் இருந்தது. பின்னர் அந்த பணத்துடன் அவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று பணத்தை எண்ணிப் பார்த்தபோது ரூ.1 கோடியே 60 லட்சம் இருந்தது. அது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது யாருடையது?, எங்கு கொண்டு செல்லப்படுகிறது? என்பது குறித்து அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்