மணப்பாறை அருகே கல் குவாரியிலிருந்து வெடித்து சிதறும் கற்கள் வீடுகளில் விழுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு… * சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு!
திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த மருங்காபுரியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் கல்வெட்டி எடுப்பதற்காக வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெடித்து சிதறும் கற்கள் அருகில் வசிக்கக்கூடிய வீடுகளில் விழுவதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றம் சாட்டியதோடு சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் புத்தாநத்தம் காவல்துறையினர், மற்றும் குவாரி நிர்வாகிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில், தற்காலிகமாக இரண்டு நாட்களுக்கு குவாரி பணிகளை நிறுத்தி வைப்பதாக கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மீண்டும் வீடுகள் மீது கற்கள் விழுந்தால் போராட்டங்கள் முழுமையாக முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் தெரிவித்து கலைந்து சென்றனர்.

Comments are closed.