வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நில அளவை துறையில் பணியாற்றிவரும் அனைத்துநிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்க வேண்டும், சிறப்பு பணிபாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருவாய்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தில் 800 வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்களின் இந்த போராட்டத்தால் தேர்தல் பணிகள் மற்றும் அரசுதுறை பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.