திருச்சி விமான நிலையத்தில் 76-வது குடியரசுதின விழா இன்று(26-01-2025) கொண்டாடப்பட்டது. அதனையொட்டி விமான நிலைய இயக்குனர் கோபாலகிருஷ்ணன் விமான நிலையத்தில் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து விழா பேருரை ஆற்றினார். விழாவையொட்டி மோப்ப நாய் சாகச குழுவினரின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மோப்ப நாய்கள் பல்வேறு சாகசங்களில் ஈடுபட்டன. வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அதனை விமான நிலைய இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள், விமான நிலைய பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கண்டுகளித்தனர்.
Comments are closed.