முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஜங்ஷன் அருகே உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு தீவிரவாத தடுப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார். மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், கவுன்சிலர் சோபியா விமலாராணி, மாவட்ட பொருளாளர் முரளி, ஓபி.சி. அணி மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம், கோட்டத் தலைவர்கள் ராஜா டேனியல்ராய், பிரியங்கா பட்டேல், பொதுச் செயலாளர் பட்டேல், ஐடி விங் டேவிட், விஜய்பட்டேல், மலர் வெங்கடேசன் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அண்ணாதுரை, மாணவரணி நரேன், ஆராய்ச்சி துறை பாண்டியன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியிலிருந்து காங்கிரசார் ஊர்வலமாக வந்து ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதை அடுத்து திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் காங்கிரஸார் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காட்டூர் பகுதியில் கோட்ட தலைவர் ராஜா டேனியல்ராய் தலைமையில் நிர்வாகிகள் ராஜீவ் காந்தி படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments are closed.