கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி மாணவர்களிடையே வினாடி வினா போட்டி- 2 அமைச்சர்கள் பரிசு வழங்கினர்…!
முன்னாள் முதலமைச்சர் மறைந்த மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி திருச்சி தெற்கு மாவட்ட பிரதிநிதிகள் சார்பாக பள்ளி மாணவர்களிடையே வினாடி- வினா போட்டி நடைபெற்றன. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் தேதி சொல்லும், தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியீட்டு விழா திருச்சி மேல சிந்தாமணி அருகில் உள்ள சிதம்பரம் மஹாலில் நடைபெற்றது. விழாவிற்கு, திருச்சி கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜேஷ், முகேஷ்குமார் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை நிலைய செயலாளர் துறைமுகம் காஜா ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். விழாவில், முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன், திருச்சி மாநகராட்சி துணை மேயர் தனக்கோடி, திமுக கவுன்சிலர்கள் வக்கீல் பன்னீர்செல்வம், சங்கர், புலவர் செந்தில், நிர்வாகிகள் கொட்டப்பட்டு இ.எம்.தர்மராஜ், ஏ.எம்.ஜி.விஜயகுமார், ஆர்.ஜி.பாபு, மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.கே.கே.கார்த்திக், மூக்கன், சங்கர், சுருளிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கேபிள் மோகன், ஜான் செல்லதுரை ஆகியோர் நன்றி கூறினர்.
Comments are closed.