Rock Fort Times
Online News

பெண் விவசாயி வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி கேட்டு மிரட்டும் தனியார் நிதி நிறுவனம் மீது நடவடிக்கை கோரி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம்…!

ஜேசிபி இயந்திரம் வாங்குவதற்காக பாடாலூரில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஜோதி என்ற பெண் விவசாயி ரூ.3.30 லட்சம் கடனாக பெற்றுள்ளார். மாதத் தவணையாக ரூ.16ஆயிரத்து 250 செலுத்தியுள்ளார். ஆகமொத்தம் வட்டியுடன் ரூ.4 லட்சத்து 87 ஆயிரம்  கட்டி இருக்கிறார்.  இந்த நிலையில் அபராத வட்டியாக  ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 148 கேட்டு ஜேசிபி இயந்திரத்தை ஜப்தி செய்ய உள்ளதாக அந்த நிதி நிறுவனம் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த  தனியார் நிதி நிறுவனத்தினரின் சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருச்சி கலெக்டர் அலுவலக நுழைவாயில் முன்பாக, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று(30-09-2024)  தரையில் அமர்ந்து  போராட்டம் நடத்தினர். இதை அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர்  ராஜலட்சுமி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்,  உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்