திருச்சி,மலைக்கோட்டை உச்சியில் போராட்டம் : அய்யாக்கண்ணு உள்பட 8 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு
திருச்சி மாவட்டத்தின் பிரதான அடையாளமாக விளங்குவது மலைக்கோட்டை. மலைக்கோட்டையின் மேல் உச்சிப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். அதனருகில், திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக இரும்பிலான டவர் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், விவசாயிகள் சிலர், மலைக்கோட்டை திருக்கார்த்திகை தீப டவரில் ஏறி போராட்டம் நடத்தினர். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பக்தர்கள், அய்யாக்கண்ணுவை மலை உச்சிக்கு அனுமதித்த கோயில் நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டினர். இந்நிலையில், திருச்சி தாயுமானவர் கோயில் செயல் அலுவலர் அனிதா கொடுத்த புகாரின் அடிப்படையில், அய்யாக்கண்ணு உள்ளிட்ட, 8 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Comments are closed.