திருச்சி, தென்னூர் வாமடம் பகுதியைச் சேர்ந்தவர் கருணாநிதி வயது 48. ஆட்டோ டிரைவர். இவரது மகள் தீக்ஷனா (12 ) . அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். வாடகை ஆட்டோ ஓட்டிவரும் கருணாநிதிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில், தினமும் குடிபோதையில் வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்து வந்தார். வழக்கம்போல் இரண்டு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் கருணாநிதி வீடு திரும்பினார். பின்னர் மனைவி, மகளிடம் தகராறு செய்து, கத்தி முனையில் தீக்ஷனாவின் கையை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட தீக்சனா, தந்தை மீது குழந்தைகள் நல கமிட்டி அதிகாரியிடம் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தலின் பேரில் தில்லை நகர் போலீசார், ஆட்டோ டிரைவர் கருணாநிதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Comments are closed.