Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடத்தப்பட்ட செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு …!

திமுக தலைவரும், தமிழக முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில் தெற்கு மாவட்ட விவசாயஅணி அமைப்பாளர் மாமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் மகேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட விவசாய அணி மற்றும் மாவட்ட தொழிலாளர் அணி சார்பில் காட்டூர் ஆயில் மில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாபெரும் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அனைவரையும் மாநகர விவசாய அணி அமைப்பாளர் குறிஞ்சி மன்னன் வரவேற்றார். போட்டியில் 7 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 9 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள், 13 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் என சுமார் 108 பேர் கலந்து கொண்டனர். ஆறு சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கிழக்கு மாநகர செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மாநகர கழக பொருளாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கேடயம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். இதில் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்கள் சங்கர், ஜெய் கணேஷ், அந்தோணி தேவதாஸ், மாநகர விவசாய அணி தலைவர் குமார், மாநகர விவசாய அணி துணை அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் மாநகர தொழிலாளர் அணி தலைவர் ராஜவேல், மாநகர தொழிலாளர் அணிதுணைத் தலைவர் நாகரத்தினம் உட்பட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்‌.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்