Rock Fort Times
Online News

பிரதமர் மோடி நாளை திருச்சி வருகை: ஹெலிகாப்டர் ஒத்திகையின்போது 100 அடி உயரத்துக்கு எழுந்த புழுதி படலம்…

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2-01- 2024 திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார். அதோடு பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றினார். இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி ,3 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வருகிறார். இதற்காக இன்று(19-01-2024) மாலை 4.50 மணிக்கு சென்னை வருகை தரும் அவர் , கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கிறார். பின்னர், இன்று இரவு ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். நாளை 20ஆம் தேதி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சி வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10.40 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலை யாத்திரி நிவாஸ் எதிரே அமைந்துள்ள கொள்ளிடக்கரை மைதானத்தில் இறங்குகிறார்.
அதனைத்தொடர்ந்து அரங்கநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். இந்தநிலையில், பிரதமர் வருகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கொள்ளிடம் பஞ்சக்கரை ஹெலிகாப்டர் தளத்தில் ஒத்திகை பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இதற்காக திருச்சி விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் ஸ்ரீரங்கத்தை வட்டமடித்தபடி ஹெலிகாப்டர் தளத்தில் இறங்கிய போது சுமார் 100 அடி உயரத்திற்கு புழுதி படலம் எழுந்தது.

அப்பொழுது HeliPad ல் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாத அளவிற்கு புழுதி படலம் மறைத்திருந்தது. இதனால், ஹெலிகாப்டர் தரையிறக்கப்படாமல் மீண்டும் விமான நிலையம் சென்றது. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது புழுதி படலம் எழும்பாமல் இருக்க லாரிகள் மூலம் அதிக அளவில் தண்ணீர் ஊற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் முறையாக ஹெலிகாப்டரை இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்