திருச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு-க்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பூச்செண்டு கொடுத்து வரவேற்பு…!
2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து இன்று (03-09-2025) திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக திருச்சி வந்தடைந்தார். அப்போது அவரை
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கீதாஜீவன் ஆகியோர் பூச்செண்டு மற்றும் புத்தகம் கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துக்கு புறப்பட்டுச் சென்றார். மதியம் 2.30 மணியளவில் பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி விழா பேருரை ஆற்றுகிறார். பின்னர் திருவாரூரில் இருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் பஞ்சக்கரையில் உள்ள இறங்குதளத்துக்கு மாலை 5.30 மணிக்கு வருகிறார். அதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு கார் மூலம் திருச்சி விமான நிலையம் செல்கிறார். இரவு 7 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
Comments are closed.