தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. வரும் 21-ம் தேதி மாலை வரை மட்டுமே தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் காலை, மாலை என பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதேபோல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தினமும் பல தொகுதிகளில் வாகனப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. தலைவர் விஜய், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், கடலூரில் நாளை(ஏப்.11) விஜய் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரசாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் விதிமுறைகளின்படி, முதலில் யார் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்ற அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. த.வெ.க. தலைவர் விஜய் முன்னதாக அனுமதி கோரி விண்ணப்பித்திருந்ததால், அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திட்டக்குடி, நெய்வேலி, வடலூர் பகுதிகளில் நாளை பிரசாரம் செய்ய உதயநிதி ஸ்டாலின் அனுமதி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது பிரசாரம் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments are closed.