Rock Fort Times
Online News

ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைதான நிலையில் காவல் ஆய்வாளர் திடீர் கைது…!

அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர். விஜயபாஸ்கர். கரூர் தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார். இந்நிலையில் மேலக்கரூர் சார் பதிவாளர் (பொறுப்பு) முகமது அப்துல் காதர், கரூர் டவுன் போலீசில ஒரு புகார் கொடுத்து இருந்தார். அதில், போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்ததுடன் தன்னை மிரட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி யுவராஜ், பிரவீண், சித்தார்த்தன், மாரியப்பன், செல்வராஜ் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கரூர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் 14 தேதி முன்ஜாமீன் கேட்டு மனு அளித்தார். இந்த மனுவை நீதிபதி விசாரித்து, எம்.ஆர்விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே கரூர் வாங்கல், குப்புச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர், குன்னம்பட்டி, தோரணக்கல்பட்டியில் உள்ள தனது 22 ஏக்கர் நிலத்தை மிரட்டியும், போலியான சான்றிதழை கொடுத்தும் பத்திரப்பதிவு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், முன்னாள் அமைச்சர் எம். ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்பட 7 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின்
கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நில மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால், தான் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என அறிந்த
எம். ஆர். விஜயபாஸ்கர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்தார். அவரைப் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார 3 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த எம். ஆர்.விஜயபாஸ்கரை கேரளாவில் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இது ஒருபுறம் இருக்க எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய நில அபகரிப்பு வழக்கில், உடந்தையாக இருந்ததாக சென்னை வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருதிவிராஜை, சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நில அபகரிப்பு வழக்கில் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யார் இந்த தேவதை ! ரசிகரின் குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..

1 of 841

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்