Rock Fort Times
Online News

பிரதமர் மோடி 20-ம் தேதி ஸ்ரீரங்கம் வருகை: ஹெலிபேடு அமைக்கும் பணி தீவிரம்…

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 ம் தேதி( சனிக்கிழமை) ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தருகிறார். இதற்காக
தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஸ்ரீரங்கம் பஞ்சகரை யாத்திரி நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரையில் அமைக்கப்படுகிற ஹெலிபேடில் தரையிறங்கி பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்கிறார்.

 

இதற்காக பஞ்சக்கரையில் தற்போது HeliPad அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. SPG எனப்படும் ஸ்பெஷல் ப்ரொடக்சன் குரூப் அதிகாரிகள் அறிவுரைப்படி,பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி அதிகாரிகள் HeliPad அமைய உள்ள இடத்தை அளவீடு செய்து மார்க் செய்து வருகின்றனர்.இந்த ஹெலிபேட் 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்டதாக அமைகிறது. மேலும், அந்தப் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக வரவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு காரணம் கருதி தற்போது ஹெலிகாப்டரில் வர உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

ஹெலிபேட் தளத்தின் அருகே உள்ள மரங்கள் பொக்லைன் உதவியுடன் அகற்றப்பட்டு வருகிறது. தீயணைப்புத்துறை வாகனங்கள், அரசியல் பிரமுகர்கள் , மத்திய, மாநில அதிகாரிகளின் வாகனங்கள் நிறுத்துவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஹெலிபேட் அமைக்கும் பணியானது, இன்று(18-01-2024) இரவுக்குள் நிறைவுபெறும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.ஹெலிபேட் தளம் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது.

🔴: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் || ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி பெருவிழா 6-ம் திருநாள்

1 of 872

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்