ஒடிசாவில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 261 பேர் பலியானதாகவும், 600- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். மேலும், உருக்குலைந்த ரயில் பெட்டிகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் மத்திய மந்திரிகள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திரா பிரதான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். பின்னர் ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் அவசர ஆலோசனை நடத்தினார். மீட்பு பணிகள், நிவாரணம், ரயில் விபத்து, சிக்னலை தாண்டி ரயில் எப்படி சென்றது உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.