திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள காளியம்மன் கோயில் தெரு பகுதியில், மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியைச் சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிலர் நேற்று ( 06.11.2023 ) மாலை அமர்ந்து மது அருந்தியுள்ளனர். இதனைத்தொடர்ந்து அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவிலிருந்து பெட்ரோலை ஒரு பாட்டிலில் பிடித்து அதை பெட்ரோல் குண்டாக மாற்றி தீயை பற்ற வைத்து அங்குள்ள மாநகராட்சி கட்டிடத்தின் மீது வீசியுள்ளனர். அந்த பெட்ரோல் குண்டு தகரத்தின் மீது விழுந்து உடைந்து தீப்பற்றி எரிந்துள்ளது. இதையடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் திரண்டு தீயை அணைத்தனர். இதுகுறித்து அறிந்த கோட்டை போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தியதில், அதே பகுதியைச் சேர்ந்த சுபாஷ், அபிஷேக் உள்ளிட்டோர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.