Rock Fort Times
Online News

ரேஷன் கடைகளில் ஜூலையில் பருப்பு, பாமாயில் பெறாதவர்கள் ஆகஸ்டில் வாங்கிக் கொள்ளலாம்

தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ரேஷன் கடைகளில் ஜூலை மாதம் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை பெறாதவர்கள், ஆகஸ்ட் மாதம் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது., தமிழ்நாடு அரசு, சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் சுமார் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம்தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு மற்றும் மானிய விலையில் பாமாயில் ஆகியவற்றை வழங்கி வருகிறது.இந்நிலையில், ஜூன் மாதத்தில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என சட்டமன்றத்தில் உணவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ரேஷன் கடைகளில் செய்யப்பட்டிருந்தது.  இருந்தாலும், ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டிற்கு சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்கள் முழுமையாக நகர்வு செய்யப்படாத காரணத்தால், குடும்ப அட்டைதாரர்களால் ஜூலை மாதத்திற்கான துவரம் பருப்பு மற்றும் பாமாயிலை முழுமையாக பெற இயலவில்லை. இதனால், ரேஷன் அட்டைதாரர்கள் ஜூலை மாதத்தில் பெறாத துவரம் பருப்பு மற்றும் பாமாயில் பாக்கெட்டுகளை, ஆகஸ்ட் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்