Rock Fort Times
Online News

கருணாநிதியின் நினைவு நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 7ல் அமைதிப் பேரணி*

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவு தினமானது, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வருகிற ஆகஸ்ட் 7ம் தேதி அமைதிப் பேரணி நடைபெறும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.,, தமிழ்நாடு முதலமைச்சர், மு.க.ஸ்டாலின் தலைமையில், கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொள்ளும் “அமைதிப் பேரணி”, ஆகஸ்ட்-7, புதன்கிழமை அன்று காலை 7.00 மணிக்கு சென்னை, அண்ணா சாலை, ஓமந்தூரார் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் சிலையிலிருந்து புறப்பட்டு, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்தில் நிறைவுபெறும் எனவும், தொடர்ந்து நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 940

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்