சிங்கப்பூர் பூனேல் அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் ( வயது 68 ). இவர் சிங்கப்பூரில் செக்யூரிட்டி கார்டாக வேலை பார்த்து வந்தார். இவர் அங்கிருந்து விமானத்தில் திருச்சி வந்தார். பின்னர் மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு அங்கிருந்து சிங்கப்பூர் செல்வதற்காக மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்தார். விமானத்தில் ஏறுவதற்காக உள்ளே சென்றபோது திடீரென்று உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது உறவினர் தனலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.