கோவை மேட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் யூடியூப் மூலம் இளைஞர்களிடம் பிரபலமானவர். இவர் தனது இருசக்கர வாகனத்தின் மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து அதனை யூடியூபில் பதிவேற்றி வருகிறார். இவா் ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார். அதேசமயம் பலமுறை இவர் போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர் மீது பலமுறை காவல்துறை வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் யூடியூபர் டிடிஎப் வாசன் சென்ற கார் மோதி பைக்கில் சென்றவர் காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் வாசன் மீது வழக்குப்பதிவு செய்து அண்ணாநகர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.