பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
திமுக மூத்த நிர்வாகி பேராசிரியர் அன்பழகனின் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள கழக முதன்மை செயலாளர் அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் திருஉருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம், விஜயா ஜெயராஜ், கருணாநிதி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் ஆனந்த், சேர்மன் துரைராஜ், டோல் கேட் சுப்பிரமணி, செவந்திலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதிச் செயலாளர்கள் கமால் முஸ்தபா, மோகன்தாஸ், நாகராஜ், இளங்கோ, மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், தொ.மு.ச.மாவட்ட அமைப்பாளர் குணசேகரன், மற்றும் நிர்வாகிகள் கலைச்செல்வி, கவிதா, உத்தமர்சீலி ராஜேந்திரன், குமரவேல், கருணாமூர்த்தி, கதிரேசன் உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Comments are closed.