செவிலியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை கைது செய்து வெளி மாவட்டத்தை சேர்ந்த செவிலியர்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட்டது. இதனை கண்டித்தும், அடக்குமுறைகளை ஏவி கைது செய்து அசாதாரண சூழலை ஏற்படுத்தி அச்சுறுத்தி வரும் காவல்துறையையும், தமிழக அரசையும், அமைச்சரையும் கண்டித்து தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் திருச்சி மாவட்டம் சார்பாக திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த போராட்டத்தில் செவிலியர்கள், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தை சேர்ந்த செவிலியர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.