Rock Fort Times
Online News

பா.ஜ.கவுடன் இனி கூட்டணி இல்லை! அதிமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டத்தில் முடிவு!

2024 லோக்சபா தேர்தலில். அதிமுக     தனி கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதிமுக – பாஜக கூட்டணி இடையே மோதல் நிலவி வந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று ( 25.09.2023 ) நடந்தது. அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த கூட்டணி முறிந்துள்ளது. இந்த நிலையில்தான் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக்கொள்வதாக அதிமுக அறிவித்துள்ளது. அதோடு லோக்சபா 2024 தேர்தலில் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக அதிமுக அறிவித்துள்ளது. புதிதாக கூட்டணி அமைப்போம், பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்