திண்டுக்கல்லை சேர்ந்த மாரிமுத்து(84) என்பவர், திருச்சி பெரிய மிளகுபாறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்நிலையில், இன்று ( செப்.-30 ) அவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப் போது இரண்டு மாடுகள் சாலையில் சண்டை போட்டு கொண்டிருந்தது. அதனை அவர் கடந்து செல்லும் போது அதில் ஒரு மாடு மாரிமுத்துவை முட்டி தள்ளியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரிமுத்துவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதி மக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திருச்சி மாநகர சாலைகளில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சாலையில் சுற்றித்திரிந்த மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் திருச்சியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.