Rock Fort Times
Online News

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த மர்ம கும்பல்…! 

சினிமா பாணியில் விரட்டிய போலீசார்..

திருச்சி உறையூர் சோழராஜபுரம் பகுதியில் இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில்  அருண்பாண்டியன், தமிழரசன் ஆகிய இருவரும்  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் இருவரையும் தாக்கும் நோக்கில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில்  4 பேர் நின்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றபோது அனைவரும் அங்கிருந்து , தப்பித்து ஓடினர். அவர்களை சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்று  ஐயப்பன் என்பவரை பிடித்தனர். அவரிடம் போலீசார் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்