திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சோபனபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சாரதா. விவசாய நிலத்தில் உள்ள பண்ணை வீட்டில் நேற்று இரவு கணவன்-மனைவி இருவரும் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை அவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். அவர்களின் முகம் சிதைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினா் . முதல்கட்ட விசாரணையில் நில குத்தகை தகராறு காரணமாக இந்த கொலைகள் நடந்து இருக்கலாம் என தொியவந்தது . இதனைத் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Comments are closed, but trackbacks and pingbacks are open.