திருச்சி ஏர்போர்ட் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் விஜயராகவன். இவரது மகன் சுந்தரேசன் (வயது 17 )இந்த சிறுவனுக்கு கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுடன் காதல் மலர்ந்தது. பின்னர் இரண்டு பேரும் மணிக்கணக்கில் இன்ஸ்டாகிராமில் பழகி வந்தனர். இதை அறிந்து அவரது தாய் மோட்சராகினி அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மகனை கண்டித்து விட்டு அவரது கையில் இருந்த செல்போனை பறித்தார். பின்னர் வேலைக்கு புறப்பட்டுச் சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது சுந்தரேசன் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் விசாலாட்சி சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Comments are closed.