Rock Fort Times
Online News

காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

திருச்சி மாநகர பகுதிகளில் காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருச்சி போலீஸ் கமிஷனர் எம். சத்ய பிரியா ஐ.பி.எஸ். கலந்துகொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். அப்போது போலீஸ் துணை கமிஷனர்கள் அன்பு மற்றும் சுரேஷ்குமார் உதவி கமிஷனர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட பலர் , உடன் இருந்தனர்.

பின்னர் போலீஸ் கமிஷனர் எம். சத்ய பிரியா ஐ.பி.எஸ். கூறுகையில்,
கடந்த 2022-2023 நிதியாண்டில் காணாமல் போன 169 செல்போன்களும், 2023-2024 -ம் ஆண்டில், காணாமல் போன 72 செல்போன்களும் மீட்கப்பட்டு உள்ளன. இந்த செல்போன்கள் அனைத்தும் அதன் ஐ.எம்.இ.ஐ. நம்பரை கொண்டு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகர காவல் துறை குற்றங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கு பொது மக்களாகிய நீங்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், செல்போன்கள் தொடர்பாக 500 வழக்குகள் நிலுவையில் உள்ளது. திருச்சி மாநகரில் போக்குவரத்து பாதிப்பு குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. போலி மதுபானங்கள் விற்பனை தொடர்பாக தொடர்ந்து நடவடிக்கை எடுக்கபட்டு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றார்.

நாட்டுக்கு நல்லது சொல்லும் || சிறப்பான‌ மேடைப் பேச்சு...

1 of 918

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்