திருச்சி, பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய இறுதி கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு…!
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரு பேருந்து நிலையங்கள் இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் குறைந்தபாடில்லை. இதனை கருத்தில் கொண்டு திருச்சி, பஞ்சப்பூரில் பல ஏக்கர் பரப்பளவில், நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு 404 பேருந்துகளை நிறுத்த இட வசதி, கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் என ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. மேலும், 70 கடைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 556 நான்கு சக்கர வாகனங்கள், 1125 இரண்டு சக்கர வாகனங்கள், 350 ஆட்டோக்கள் நிறுத்த பிரம்மாண்டமான பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை வருகிற மே ஒன்பதாம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிலையில் பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட கட்டுமான பணிகள் மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று(26-04-2025) பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு தகுந்த ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், ஆணையர் சரவணன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, கழக நிர்வாகிகள் காஜாமலை விஜய், கிராப்பட்டி செல்வம் மற்றும் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.