கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் வ.உ. சிதம்பரத்தின் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்சி கோர்ட் அருகே உள்ள வ.உ.சி. சிலைக்கு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி, கதிரவன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி, வழக்கறிஞா் சரவணன், வ.உ.சி.பேரவை நிர்வாகிகள் டாக்டா். செந்தில் , ஹரிஹரன் மற்றும் மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.