Rock Fort Times
Online News

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் “அட்மிட்”…!

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். சளி பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் துரைமுருகன் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர், இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும் கூறப்படுகிறது. இன்றைய தினம் ( மே 8) அமைச்சர் துரைமுருகனிடமிருந்த கனிமவளத்துறை இலாகா அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டது. அமைச்சர் ரகுபதி வசமிருந்த சட்டத்துறை அமைச்சர் துரைமுருகனிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்