மலேசியாவுக்கு கல்வி சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்களுடன் வீடியோ காலில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்… (வீடியோ இணைப்பு)
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். அந்த வகையில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கொண்ட ஒரு குழு மலேசியாவிற்கு கல்வி சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுப்பயணத்தின் முதல்நாளில், மலேசியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கோலாலம்பூரில் அமைந்துள்ள கே.எல். டவரை மாணவச் செல்வங்கள் பார்வையிட்டனர். 421 மீட்டர் உயரமுடைய கே.எல். டவரில் இருந்து கோலாலம்பூர் நகரை 360 டிகிரி கோணத்தில் கண்டுகளித்த அவர்கள், அங்குள்ள கட்டிடக்கலை மற்றும் அறிவியல் அதிசயங்களை நேரில் அனுபவித்து மகிழ்ந்தனர். அப்போது சுற்றுலா அழைத்துச் சென்ற ஒருங்கிணைப்பாளர் ஒருவரது செல்போனுக்கு வீடியோ காலில் வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். சுற்றுலா அனுபவம் எப்படி இருக்கிறது என்று கேட்டறிந்தார். அதற்கு மாணவர்கள் ரொம்ப சூப்பரா இருக்கு சார்… உங்களுக்கு ரொம்ப நன்றி சார் …என்று தெரிவித்தனர். ஓகே.நன்றாக சுற்றி பார்த்துவிட்டு வாருங்கள் என்று அமைச்சர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Comments are closed.