தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 234 தொகுதிகளிலும் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 69’வது தொகுதியாக திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் ஆசிரியர்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.