Rock Fort Times
Online News

திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்…!

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து விட்டதாகவும், அதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழக முழுவதும் இன்று(04-03-2024) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல, திருச்சியில் ஒருங்கிணைந்த அதிமுக, இளைஞர்- இளம்பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்பி குமார், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட மாணவரணி செயலாளர்கள் பொறியாளர் இப்ராம்ஷா, டி.அறிவழகன், அழகர்சாமி, மகளிர் அணி செயலாளர்கள் செல்வமேரி ஜார்ஜ், நசீமாபாரிக், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர்கள் அருண் நேரு, சோனா விவேக், இலியாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரத்தினவேல், முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்திராகாந்தி, பரமேஸ்வரி, மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் வனிதா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கார்த்திகேயன், இளைஞரணி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆமூர் சுரேஷ்ராஜா மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசுகையில், திமுக அரசு செய்த ஒரே சாதனை தமிழகத்தை சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல் தலைநகரமாக மாற்றியதுதான். ஒரு இடத்தில் மட்டும் 2000 ம் கோடி ரூபாய்க்கு போதை பொருள் பிடித்தார்கள் என்றால் குறைந்தது ஜாபர் சாதிக் தலைமையில் 20 ஆயிரம் கோடிக்கு மேல் நெட்வொர்க் நடந்திருக்கிறது. இது தான் திமுக அரசின் லட்சணம்.
தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. இந்த அரசுக்கு வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டும் அளவிற்கு 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற பாடுபடுவோம் என்று பேசினார். முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேசுகையில், தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது. போதைப் பழக்கத்தால் இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது. ஆகவே, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார். முன்னாள் எம்பி குமார் பேசும்போது: தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சிக்கு வந்து ஏறத்தாழ 3 ஆண்டுகள் முடிந்துவிட்டது.
ஆனால், கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. மக்களுக்கு எதையும் செய்யாமல் போதைப்பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், விற்பனை செய்பவர்களுக்கும் அரணாக திமுக அரசு இருக்கிறது. போதைப் பொருள் வழக்கில் முக்கிய குற்றவாளியான சாதிக் பாஷா, முதலில் ஜக்குபாய் படத்தின் சீடியை திருட்டுத்தனமாக விற்பனை செய்ததற்காக கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது வெளிநாடுகளுக்கு குருவி போன்று பறந்து சில கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். பின்பு மாணவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்வதில் இருந்து வெளிநாடுகளுக்கு சப்ளை செய்யும் வரை தனது தொழிலை விரிவு படுத்தினார். சாதிக் பாஷாவிடம் பணம் பெறாத திமுக நிர்வாகிகளே கிடையாது. போதை பொருட்கள் கடத்தியவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட மக்கள் தயாராக உள்ளார்கள் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்