தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே இருப்பதால் அரசியல் களம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது. முன்னாள் அரசியல் கட்சி பிரமுகர்கள் சிலர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்தவகையில் இன்றைய தினம் மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரான பி.எம்.மன்னன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அதேபோல, பல மாநிலங்களில் லாட்டரி சீட்டுகளை நடத்தி வரும் லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்தார். இவர், பாரிவேந்தர் தலைமையிலான ஐ.ஜே.கே.வில் இருந்து அண்மையில் விலகினார். லீமா ரோஸ் மகன் சார்லஸ் மார்ட்டின் லட்சிய ஜனநாயக கட்சியை நடத்தி வருகிறார். மருமகன் ஆதவ் அர்ஜுனா தவெகவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.