Rock Fort Times
Online News

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் ஓட, ஓட விரட்டி பெண் படுகொலை…!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள சிறுகாம்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சுமதி(வயது 42). சலவை தொழிலாளியான ரவிக்குமாருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால், திருச்சியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் சுமதி வேலை பார்த்து வந்தார். வேலைக்கு செல்லும்போது வாழ்மால் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து(30) என்பவருடன் சுமதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். இது உறவினர்களுக்கு தெரிய வரவே, அவர்கள் சுமதியை கண்டித்துள்ளனர். இதனால் சுமதி, மாரிமுத்துவிடம் கள்ளத்தொடர்பை துண்டித்துக்கொள்ளலாம் என்று கூறி உள்ளார். அதன் பின்னர் மாரிமுத்து சுமதியை பார்க்க வந்தபோது அவர் பேச வில்லை. மேலும் மாரிமுத்துவின் செல்போன் அழைப்பையும் அவர் ஏற்கவில்லை. கள்ளக்காதலி திடீரென கள்ளதொடர்பை துண்டித்துக்கொண்டதை மாரிமுத்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுமதியிடம் நேரில் வந்து உல்லாசத்திற்கு அழைத்த போதும் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மாரிமுத்து இன்று(17-06-2024) சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் கத்தியுடன் காத்திருந்தார். அப்போது வேலைக்கு செல்வதற்காக அங்கு வந்த சுமதியை கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளார். இதில் கதறி துடித்த சுமதி தப்பித்து ஓடினார். ஆனால், ஓட ஓட விரட்டி சென்று ஆத்திரம் தீரும் வரை சுமதியை மாரிமுத்து கத்தியால் குத்தி உள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சுமதி அங்கேயே சரிந்து விழுந்தார்.

இதனை கண்ட பொதுமக்கள் மாரிமுத்துவை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடம் இருந்த கத்தியை பிடுங்கி
தர்ம அடி கொடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த சுமதியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பொதுமக்களால் தாக்கப்பட்ட மாரிமுத்துவை வாத்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுகாம்பூர் பஸ் நிலையத்தில் பெண் ஒருவர் ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்